K. Annamalai: கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி!

K. Annamalai

காவிரி தண்ணீரை வைத்துப் பா.ஜனதா அரசியல் செய்கிறது எனப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்…

காவிரி தண்ணீரை வைத்துப் பா.ஜனதா அரசியல் செய்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் உறுதியாக இல்லை. ஆனால் பா.ஜனதா தண்ணீர் திறக்கக் கூடாது என்று அரசியல் செய்வதால்தான் அரசும் தயங்குகிறது.

அங்குள்ள பா.ஜனதாவை இங்குள்ள அண்ணாமலை ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறை கூறினார். இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது பலமாகச் சிரித்துவிட்டார்.

அணை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. திறப்பதற்கான சாவியும் அவர்களிடம்தான் இருக்கிறது. ஆனால் திறக்காததற்கு காரணம் நாங்கள் தான் என்றால் மக்கள் நம்புவார்களா? என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *