
தென்காசி பொண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பொள்ளாச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்த பெண் தனியா சிப்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனிற்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான குறுந்தகவல் வந்துள்ளது.இதையடுத்து அந்த பெண் தென்காசி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் மனு அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி சுரேஷ்குமார் உத்தரவின்படிசைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் ஆலோசனையின் படி இன்ஸ்பெக்டர் ஜோஸ்வின் அருள்செல்வி சப் இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை நரசிம்மபுரம் பாடசாலை தெருவை சார்ந்த கருணாகரன் மகன் ஜனகர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட ஜனகர் தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி பொண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி சுரேஷ்குமார் பாராட்டினார்.

