Jaipur: மேடை சரிந்ததில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மேடை சரிந்த சம்பவத்தில் ராஜஸ்தான் பாஜக அமைச்சர் காயமின்றி தப்பினார். ஆனால் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் ஹிராலால் பார்த்து ஆறுதல் கூறினர்.

ஜெய்ப்பூர்: மேடை சரிந்த சம்பவத்தில் ராஜஸ்தான் பாஜக அமைச்சர் காயமின்றி தப்பினார். ஆனால் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில அமைச்சருமான ஹிராலால் நாகர், தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாகத் தனது தொகுதிக்கு வந்தார். அமைச்சருக்குச் சங்கோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர் ஏறினார்.

ஆனால் அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மேடையில் அமர்ந்தும், நின்றும் இருந்தனர். அமைச்சர் மேடையேறிய அடுத்த சில நிமிடங்களில் எடை தாங்காமல் மேடை சரிந்தது. அப்போது மேடையில் இருந்த அமைச்சர் ஹிராலாலும் விழுந்தார். ஆனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேநேரம் பாஜகவைச் சேர்ந்த ஜெய்வீர் சிங், மகேந்திர சர்மா, மனோஜ் சர்மா, சந்திர பிரகாஷ் சோனி ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் ஹிராலால் பார்த்து ஆறுதல் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *