
சண்டிகர்: ஹரியானாவில் இன்று (ஏப்.,11) காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளிப்பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் நர்னால் பகுதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஜி.எல் பப்ளிக் பள்ளியின் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே வந்தபோது, பேருந்து திடீரென விபத்தில் சிக்கியது.
இதில் பேருந்தில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்தின் தகுதிச்சான்றிதழ் 2018ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரம்ஜான் தினமான இன்று விடுமுறை விடப்படாமல் பள்ளியை இயக்கியதாக அதிகாரிகள் பள்ளி மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
பேருந்தில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


