DEMU train : தீ விபத்து!

மகாராஷ்டிராவில் ரயிலில் தீ விபத்து.

மகாராஷ்டிரா- சோலாப்பூர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் எரிந்து சேதம்.

பயணிகள் ரயிலில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதமடைந்துள்ளது. ரயிலில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா-சோலாப்பூர் ரயில் சென்று கொண்டிருந்த போது, அஹமத்நகர் பகுதி அருகே வந்தபோது திடீரென்று தீ பற்றி எரிந்தது.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு , தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். ரயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *