தொலைநோக்குப் பார்வை இல்லாத காங்கிரஸ் தற்போது நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் குறித்து குழப்பத்தை பரப்பி புதிய தந்திரங்களை வகுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தில்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 140 கோடி குடிமக்களின் அயராத உழைப்பால் ‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையிலும், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த வளர்ச்சியைக் கண்டு விரக்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கொள்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாத காங்கிரஸ் தற்போது நாடு முழுவதும் குழப்பத்தை பரப்பி புதிய தந்திரங்களை வகுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இப்போது, அவர்கள் பரப்பிய பொய்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்திய பிறகும், மீண்டும் ஒருமுறை சூழலைக் கெடுக்க முயற்சிப்பதாகக் கூறினார்.
ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு, நாட்டின் தன்னாட்சி மற்றும் அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களை இழிவுபடுத்துவதும் பலவீனப்படுத்துவதுமே ஒரே செயலாக ஈடுபட்ட வருகின்றனர் என்று தெரிவித்தார்.
நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க முயலும் சக்திகளுக்கு மக்கள் ஏற்கனவே தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் அவர்களின் ஒவ்வொரு மாயையும் மக்கள் மன்றத்தில் தகர்க்கப்படும் என்று கூறினார்.



