Milk Price Hike : ஆவின் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்.!

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூபாய் 3 உயர்த்தி, ரூபாய் 44 ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப்விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவிக்கையில், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, கூட்டுறவு சங்கம் மூலமாக ரூபாய் 1 உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை ரூபாய் 3-லிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து, ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூபாய் 38-லிருந்து ரூபாய் 41 உயர்த்தி 19-ஆம்  தேதி சட்டமன்ற பேரவையில் அறிவித்தோம் என முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்தார்.

மேலும், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித்தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளனர் என்றும், எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து த.வெ.க. அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் மேலும் ரூபாய் 3 உயர்த்தி 44 ரூபாயாக வழங்க தற்போது த.வெ.க. அரசு முடிவு செய்துள்ளது என்று முதலமைச்சர் ஜோசப்விஜய் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *