பொங்கல் பரிசு வேட்டி விவகாரம் : தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4-ல் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், 2027-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைத்திருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது, த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறை புதிய வடிவமைப்பில் வேட்டி-சேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்துள்ளன எனவும்,

முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன என்றும், இதில் பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக, வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டி வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும்,

அதன் அடிப்படையில்தான் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *