ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்றும், 100 நாட்களை கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக நெல்லையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் தான் பிரதமர் வேட்பாளராக முடியும் என்றும்,
இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்து களை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை இருந்தது.
தற்போது அந்த நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது என்றும், எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்றும் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



