ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா குமாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உங்கள் சிறப்பான செயல்பாடு, இந்தப் பிரிவில் பதக்கம் வெல்வதற்காக இந்தியா காத்திருந்த 16 ஆண்டுகால இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இது உங்கள் விளையாட்டுப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாகவும், மிகுந்த பெருமைக்குரியத் தருணமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் கலப்பு அணி நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா ஆகியோருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கீட் கலப்பு அணி நிகழ்வில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும் என்று குறிப்பட்டுள்ளார். இருவரும் சிறந்த குழுப்பணி மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினர், விளையாட்டுகளில் ஸ்கீட்டில் இந்தியாவின் வலுவான செயல்திறனைச் சேர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

