இத்தாலி பயணத்தை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்!

Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதிவரை ரோம் நகருக்குச் செல்கிறார் என்றும், அதிபர் ஜோ பைடன் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளாரெனத் தெரிவித்து இருந்தது.

அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாமெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை போராடி அணைக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அதிபரின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *