ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் – நாளை ரிலீஸ்!

Advertisements

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா, தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜீவாவின் 47-வது படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஜீவாவின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா–ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், ‘பரிதாபங்கள்’ சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன.

இந்நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஜீவா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *