ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நேற்று நடிகர் தனுஷ் ‘ஜிகர்தண்டா 2’ படத்தை பார்த்துவிட்டேன் என்றும் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.