
மூன்று நாய்கள் 2 குழந்தைகளுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் தம்பதி. போலீஸ் விசாரணையில் நீங்காத மர்மம். அமெரிக்காவில் நடந்த கொடூரம்…
3 நாய்கள், 2 குழந்தைகளுடன் அமெரிக்காவில் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யாரேனும் அவர்களைக் கொன்றார்களா அல்லது அவர்களே தற்கொலை செய்து கொண்டார்களா என்ற மர்மம் அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் கொலைகாரனை தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ரோமியோவில்லே பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குப் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வீட்டில் எந்த அழைப்புக்கும் பதில் வராமல் இருந்துள்ளது. அவர்களது உறவினர்கள் அழைப்புக்கும் பதில் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் கடந்த ஞாயிறு அன்று வீட்டுற்குள் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர்.
வீட்டிற்குள்ளே துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில் 3 நாய்கள், 2 குழந்தைகளுடன் இளம் தம்பதியினர் உயிரிழந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விசாரணையை உடனடியாகத் தொடங்கினர்.
முதல் கட்ட விசாரணையில் தம்பதியின் பெயர் ஆல்பர்டோ ரோலன், ஜொரைடா பார்த்தலோமியெனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் 10 வயதாகும் ஏட்ரியல், 7 வயதாகும் டீகோ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அதிகாலைக்கு இடையே நடந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்து இந்தக் கொலையைச் செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்களுக்குப் போதுமான தடயங்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் மற்றவர்களைக் கொன்று, கடைசியில் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட சோகச் சம்பவம் நடந்துள்ள நிலையில், உயிரிழப்பு நடந்த பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

