மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆருடன் ‘தேவாரா’ படத்தில் நடித்துத் தெலுங்கிலும் அறிமுகமானார். தமிழ் படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வருகிறார்.
தனது தாயாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும் திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை பற்றி யார் பேசினாலும் அவரது முகம் பிரகாசமாகி விடுகிறது.
ஏழுமலையான் மீதான பக்தியால் திருப்பதியிலேயே குடியேறவும் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஜான்வி கபூர் கூறும்போது, ”திருமணத்துக்குப் பிறகு கணவருடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
திருப்பதியில் சாதாரணமான பெண்ணாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
திருப்பதியில் வாழை இலையில் உணவைச் சாப்பிட்டு தினமும் கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கேட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கவும், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அங்கேயே அமைதியாக வாழவும் விரும்புகிறேன்.
ஏழுமலையான் கோவிலில் கடைபிடிக்கும் சம்பிரதாயத்துக்கு ஏற்ற மாதிரி எனது கணவரை வேட்டி அணியும்படியும் சொல்வேன்” என்றார்.

