சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். ஸ்டைல் ஸ்டைல் தான் சூப்பர் ஸ்டைலு தான்…ஒலிக்காத தெருவே இல்லை. பட்டி தொட்டியெங்கும் உரக்க ஒலித்த இந்த பாடல் ரஜினியின் பெயர் சொல்பவை…
No Compettition.. No End… ஆமாம் அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..
தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் இன்று. கே. பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் வில்லனாக அறிமுகமாகி, 16 வயதினிலே , மூன்று முடிச்சு போன்ற படங்களில் பக்கா வில்லன்.. ஆறிலிருந்து அறுபது வரை அமைதியான அண்ணன், ராகவேந்திரா ஆன்மீக வேடம்.. பாசம், பரிவு, கனிவு, அனைத்தும் இவரது நடிப்பில் பார்த்தாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிம்ம சொப்பனாக திகழும் நடிகர் ரஜினிகாந்த். பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி பிறந்தார். இவர், நடத்துனராக இருந்து நடிகராக வளர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. உலகின் எங்கோவொரு மூலையில் சிவாஜி ராவ்வாக பிறந்த இவர் இன்று சூப்பர் ஸ்டார்.
சிறப்பு;
தெருவோர டீ கடை முதல் பாராளுமன்றம் வரை அறியப்படுகிறார். நடிகர் ரஜினிகாந்தை, சூப்பர் ஸ்டார், மக்களின் நாயகன், தலைவா என பல பெயர்களால் ரசிகர்கள் ஆராதிக்கின்றனர். உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
தமிழ் திரையுலகில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் காலூன்றுவதை விட, வேறு மொழி பேசுபவர்கள்தான் அதிகமாக வெற்றி பெறுகின்றனர். அதற்கு ரஜினிகாந்தும் விதிவிலக்கல்ல. சிவாஜிராவ் கெய்க்குவாட் என்ற தனது பெயரை, படங்களில் நடிப்பதற்காக ரஜினி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1975-ல் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த இவர், இன்று தமிழின் ஒன்-அண்ட்-ஒன்லி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்திருக்கிறார்.
திரையுலகில் உச்சம்;
1990களுக்கு பிறகு, ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள், காதல், சண்டை, பழைய பகை போன்ற அம்சங்கள் நிறைந்த அவர் பேசும் பஞ்ச் வசனங்களையும் ஸ்டைலையுமே மிகவும் பிடிக்கும் ரசிகர்களுக்கு.பல வெற்றிப் படங்களின் மூலம் திரையுலகில் உச்சம் தொட்டார்.
அரசியல் ஆசை;
தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நீண்ட நெடு நாட்களாக தொடர்பு உண்டு. எம் ஜி ஆர், ஜெயலலிதா தொட்டு நடிகர்களை விடாமல் துரத்தி வருகிறது அரசியல் மோகம். இதுபோலதான் அரசியலும், ரஜினியும் பிரிக்கவும் முடியாத இணைக்கவும் முடியாத காந்த சக்தி போன்றது. தனது ஆரம்ப காலத்தில், நடிக்க மட்டும் வந்த இவர், சினிமாவில் கொஞ்சம் புகழ் பெற்ற பிறகு தான் பேசும் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசயல் வசனங்களை பேச ஆரம்பித்தார்.
1990 முதல் சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் உள்பட பல படங்களில் “பதவி, கட்சி” என பேசியிருப்பார் ரஜினி. இதனால் “தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்” என நம்பிய ரஜினியின் ரசிகர்கள், கடைசியல் “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று பாட்டு பாட வேண்டிய நிலைமை வந்து விட்டது. ஆனால் இன்று வரை அரசியலில் இறங்கவில்லை.
முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு ஜப்பானில் ரசிகர் கூட்டமே உண்டு. பாட்ஷா, படையப்பா போன்ற படங்கள் சொல்லக்கூடியவை.
தனது 73-ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவர் தமிழ்த்திரையுலகின் என்றும் மார்கண்டேயனாக அறியப்படுகிறார் என்றால் மிகையாகாது.


