Jammu kashmir Assembly election:2ம் கட்ட வாக்குப் பதிவு விறு விறு..!

Advertisements

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று(செப்.,25) 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி நடந்து வருகிறது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. செப்., 18ம் தேதி முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு இன்று (செப்., 25ம் தேதி) தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி நடந்து வருகிறது.

நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஓட்டளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில், முதன்முறையாக ஓட்டளிக்க போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் கட்டமாக, 40 தொகுதிகளுக்கு அக்., 1ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்.,4ல் நடக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *