Festival: தீகுண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனைச் செலுத்திய பக்தர்கள்!

Advertisements

ஸ்ரீ அங்காள ஈஸ்வரி-பெரியாயிஅம்மன் ஆலயத்தில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் தீகுண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனைப் பூர்த்தி செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சி மகாலட்சுமி நகர் அருள்பாளித்துவரும்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி  பெரியாயி அம்மள் ஆலயத்தின் மாசி மகம் விழா மற்றும்  10-ம் ஆண்டு தீமிதி திருவிழா அம்மன் அருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆலய பொறுப்பாளர்கள் சசிகுமார், மணிகண்டன், சுரேஷ், சாந்திதர்மன், அருஞ்சுனைமுத்து ஆகியோர் முன்னிலையில்  கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்திலிருந்து  பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல், கொடிஏற்றுதல், கூழ்வார்த்தல், பூங்கரகம் எடுத்தல்  மற்றும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  சுமார் 250-க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதம் இருந்த  பக்தர்கள் ஆலயம் அருகே அமைக்கப்பட்ட தீகுண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தங்களின் நேர்த்தி கடனைப் பூர்த்தி செய்தனர். பின்னர் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.முடிவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் விடாத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு விக்னேஸ்வரன், மணிவண்ணன், கந்தன், கணபதி, கண்ணன், வேலன் மேஸ்திரி, திருமலை, முருகன், ராஜ்குமார், ஆகாஷ் ராஜேந்திரன், அசோக் உள்ளிட்ட சுற்று வட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *