நடிகர் ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் ஜெய் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த பாபு விஜய் இப்படத்தினை இயக்கியுள்ளார். இதில், மீனாட்சி கோவிந்தராஜன், யோகிபாபு, கருடா ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையடுத்து, இப்படத்தின் ‘அக்கடி கொழுத்து பக்கடி’ என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. நீண்ட நாள் கழித்து நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


