
பெரும்பாலானோர் சுரைக்காயை சமைக்கும்போது அதன் தோலை உரித்துக் கீழே குப்பையில் வீசி விடுகிறார்கள். ஆனால் சுரைக்காய் தோல்-ஐ கூடச் சாப்பிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆனால் பெரும்பாலானோர் சுரைக்காயை சமைக்கும்போது அதன் தோலை உரித்துக் கீழே குப்பையில் வீசி விடுகிறார்கள். ஆனால் சுரைக்காய் தோல்-ஐ கூடச் சாப்பிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெங்களூரில் உள்ள ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் பேசுகையில் சுரைக்காய் தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக விளக்கினார்.
சுரைக்காய் தோலில் டயட்ரி ஃபைபர் சத்து உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் வயிறை நிரம்ப செய்யும் நிறைவான உணர்வை வழங்குகிறது, இதன் மூலம் எடை மேலாண்மைக்கு சுரைக்காய் தோல் உதவும்.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்ஸ் உள்ளன, இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் சி.வி.ஐஸ்வர்யா பேசுகையில் சுரைக்காய் தோலை ஃபிரஷ்ஷாகவும், முறையாகவும் சமைத்து, அளவாக எடுத்துக் கொண்டால் அது உண்மையில் பாதுகாப்பானது என்று குறிப்பிட்டார்.
சுரைக்காய் தோலில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது, இது குடலை ஆரோக்கியமாக வைக்கவும் மற்றும் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது. சுரைக்காய் தோலில் பாலிஃபினால்ஸ் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளன, இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் இன்ஃபளமேஷனை குறைக்கிறது.
அதே சமயம் அறிவியல் ஆய்வுகள் சுரைக்காய் தோலில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றன, இவை குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறினார்.
சிலர் சுரைக்காய் தோலை ஜூஸாக குடிக்கலாம். ஆனாலும் சுரைக்காய் தோல் ஜூஸை அதிகமாக உட்கொள்வது ரத்தத்தில் உள்ள சோடியம் லெவலை குறைக்கலாம். இது பலவீனம், குழப்பம் அல்லது கடுமையான சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே நிபுணர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகிறார்கள்.
கூடுதலாகச் சில தனிநபர்கள் சுரைக்காய்க்கு அலர்ஜிக் ரியாக்ஷன்ஸ்களை எதிர்கொள்ளலாம், இது அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும். சுரைக்காய் தோலை தூக்கி போடுவதற்கு பதிலாக, அதைக் கொண்டு சமைக்கலாம்!
கழுவி சமைக்கவும்:
அழுக்கு அல்லது பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் எச்சங்களை நீக்கச் சுரைக்காய் தோல்களை நன்கு கழுவி பின்னர் சமைக்கவும்.
வறுக்கவும்:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கவும். பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்த சுரைக்காய் தோல் மற்றும் மஞ்சள், உப்பு போன்ற பொருட்களைச் சேர்க்கவும்.
மென்மையாகும் வரை வேக வைக்கவும்:
