
பிக்பாஸ் பிரபலமும், விஜய் டிவி சீரியல் நடிகையுமான கேப்ரியல்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடி பிரபலமானவர் கேபிரியல்லா. சிறுவயது முதலே ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர், நடிகர் தனுஷின் 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதன்மின் மளமளவென வளர்ந்த கேப்ரியல்லா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்ற கேப்ரியல்லா, ரூ.5 லட்சத்துடன் கூடிய பணப்பெட்டி உடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அந்தச் சீசனுக்கு பின்னர் கேப்ரியல்லாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதையின் நாயகியாக நடிக்கக் கமிட் ஆனார் கேபி.
ஈரமான ரோஜாவே 2 சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ஓராண்டுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்தச் சீரியல் கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அந்தச் சீரியலில் நடித்த மற்றொரு ஹீரோயினான சுவாதி கொண்டே தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கச் சென்றுவிட்டார். அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சுவாதி கொண்டேவை போல் சினிமாவில் ஹீரோயின் சான்ஸை தட்டிதூக்க முடிவெடுத்த கேபி, தற்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடை அணிந்தபடி விதவிதமாகப் போஸ் கொடுத்து அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


