
நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் துருக்கியின் செனாப் ஜொன்மெசை வீழ்த்தி அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், துருக்கியின் செனாப் ஜொன்மெஸ் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாவது சுற்றில் கோகோ காப்,ஸ்பெயினின் பாலா படோசா உடன் விளையாடுகிறார்.




