Kalabhavan Man: மரணம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல்!

Advertisements

கலாபவன் மணி மரணம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கலாபவன் மணி. மிமிக்ரி கலைஞரான இவர், கலாபவன் என்கிற நாடக கம்பெனியில் இருந்து சினிமாவுக்குள் நடிக்க வந்ததால் இவரை கலாபவன் மணி என்கிற பெயரிலேயே அனைவரும் அழைக்கத் தொடங்கினர். இவர் மலையாளத்தில் முதன்முதலில் நடித்த திரைப்படம், அக்‌ஷரம், அப்படத்தில் ரிக்‌ஷா ஓட்டுனராக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

Advertisements

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த கலாபவன் மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. அந்த வகையில் மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய அவர் கோலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் மறுமலர்ச்சி. இருப்பினும் கலாபவன் மணியை கோலிவுட்டில் நன்கு பிரபலமாக்கியது விக்ரமின் ஜெமினி திரைப்படம் தான். இப்படத்தில் தேஜா என்கிற வில்லன் கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இதையடுத்து கோலிவுட்டிலும் கலாபவன் மணிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பின்னர் விஜயகாந்தின் தென்னவன், மாதவனின் ஜே ஜே, சூர்யாவுக்கு வில்லனாக வேல், சிம்புவுக்கு வில்லனாக குத்து, ரஜினியுடன் எந்திரன், கமல்ஹாசனின் பாபநாசம் என கோலிவுட்டிலும் முன்னணி வில்லன் நடிகராக ரவுண்டு வந்தார் கலாபவன் மணி. இப்படி தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் அவரது உடலில் ரசாயன பொருட்கள் கலந்திருப்பதாக தெரியவந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்கிற சந்தேகமும் எழுந்தது. இதையடுத்து கலாபவன் மரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அதனை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் என்பவர் தற்போது திடும் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என அவர் கூறி உள்ளார். கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12 முதல் 13 பீர் குடிப்பார் என்றும், இதனால் கல்லீரன் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோது கூட அவரால் பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை எனவும் அவர் கூறி உள்ளார். அவர் இறந்த நாளன்று கூட 12 பீர் குடித்திருந்ததாகவும், அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *