“லக்னோ vs சென்னை : வெற்றி யாருக்கு……?”

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 59 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோவில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 59 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையிலான வீரர்களும், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில், இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. எனவே, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *