International Surf Open 2023: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜப்பான் வீரர்!

International Surf Open 2023 | Final | Japan

மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் ரைஹா ஓனோவை வீழ்த்திக் கியான் மார்டின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்…

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அலைச்சறுக்கு போட்டியில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் கியான் மார்டின், ஜப்பான் வீரர் ரைஹா ஓனோவுடன் மோதினார். இந்தப் போட்டியில் ரைஹா ஓனோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கியான் மார்டின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *