Bengaluru: ரெயிலில் திடீர் தீ!

Bengaluru | Train | Fire accident | KSR Bengaluru City Junction | Udyan Express

பெங்களூருவில் நின்று கொண்டிருந்த ரெயிலின் இரண்டு பெட்டிகளிலிருந்து திடீரெனத் தீப்பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது…

பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நின்று கொண்டிருந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளிலிருந்து திடீரென அதிக அளவில் புகை வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் ரெயிலிலிருந்து இறங்கிய 2 மணி நேரத்திற்கு பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உயிர்சேதமோ, காயமோ இல்லை.

தீவிபத்துக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *