
சூடான் நாட்டின் கலோகி நகரில் கிளர்ச்சியாளர்களின் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படை நடத்திய தாக்குதலுக்கு ஐநா அவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள கலோகி நகரில் கிளர்ச்சியாளர்களின் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படை ஆர்எஸ்எஃப் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத், தாக்குதலில் 43 குழந்தைகள் உள்பட 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்கு ஆர்எஸ்எஃப் பொறுப்பேற்க வேண்டும், தாக்குதல் நடத்தியவர்களைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவத்திற்க்கும் ஆர்எஸ்எஃப்-க்கும் இடையே 2023 ஆம் ஆண்டில் இருந்து மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மழலையர் பள்ளி, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஐநா அவை கடும் கண்டனம் தெரிவித்தது.


