Instagram: வெளுத்து வாங்கிய நடிகை!

Advertisements

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஷாலு ஷம்மு, கொச்சையாகக் கேள்வி கேட்ட நபரை வெளுத்து வாங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது…

பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாகத் தெகிடி, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் இரண்டாம் குத்து, பவுடர் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், நடிப்பின் மூலம் இவருக்குப் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் குதித்தார் ஷாலு ஷம்மு.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியாகப் போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களையும், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஷாலு ஷம்முவின் ஓவர் டோஸ் கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் அவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ஷாலு ஷம்மு, அப்போது தன்னிடம் அரசியல் தவிர்த்து எந்தக் கேள்வினாலும் கேளுங்க எனச் சொல்ல, அதற்கு ஒருவர் உங்க மார்பு சைஸ் என்ன என மிகவும் கொச்சையான கேள்வியைக் கேட்டிருந்தார்.

இதனைப் பார்த்துக் கடுப்பான ஷாலு ஷம்மு, உன்னுடையதை விடப் பெரியதுதானென அவர் பாணியிலேயே அவருக்குச் செருப்படி பதில் கொடுத்துள்ளார். ஷாலு ஷம்முவின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் இது போன்ற நபர்களுக்கு இப்படி தான் ரிப்ளை கொடுக்க வேண்டும் எனப் பாராட்டி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *