
தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சவரன் ரூ.53,280-க்கும், கிராம் ரூ.6,660-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை சற்று அதிகரித்து, கிராம் ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,670-க்கு விற்பனையானது.
இன்றைய (ஆகஸ்ட் 20) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,115-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,920-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

