Covid : இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று தற்போது மீண்டும் இந்தியாவில் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 1435 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். மகாராஸ்டிரா மாநிலத்தில் 506 பேரும், டெல்லியில் 483 பேரும், கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 189 பேர் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் மகாராஸ்டிரா   மாநிலங்களில் கொரோனா தொற்றால் ஒருவர்  உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *