டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி!

Advertisements

வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 86.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் வெளிப்படும் எதிர்மறையான டிரெண்ட் ஆகியவை இந்திய பண வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியால் சந்தையில் எதிர்பார்த்ததை விட டாலர் மதிப்பு வலுப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தில், இன்று காலை வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் 86.12 ஆகத் தொடங்கியது.

பின்னர் 27 பைசா சரிந்து 86.31 ரூபாய இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து இது 27 பைசா சரிவாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *