ICC ODI Squad 2023: டாப் டென் இடத்தை ஆக்கிரமித்த இந்திய வீரர்கள்!

Advertisements

2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

துபாய்: 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்ப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியிலிருந்து 6 வீரர்களும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா 2 வீரர்களும் நியூசிலாந்திலிருந்து 1 வீரரும் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம் பின்வருமாறு;-

1. ரோகித் சர்மா (கேப்டன்) – இந்தியா

2. சுப்மன் கில் – இந்தியா

3. டிராவிஸ் ஹெட்- ஆஸ்திரேலியா

4. விராட் கோலி – இந்தியா

5.டேரில் மிட்செல் -நியூசிலாந்து

6.ஹென்ரிச் கிளாசென் – தென் ஆப்பிரிக்கா

7. மார்கோ ஜான்சன் – தென் ஆப்பிரிக்கா

8.ஆடம் ஜம்பா – ஆஸ்திரேலியா

9. முகமது சிராஜ்- இந்தியா

10.குல்தீப் யாதவ்-இந்தியா

11.முகமது ஷமி- இந்தியா

பெண்கள் அணியைப் பொறுத்தவரை இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

அணி விவரம்;-

1.போப் லிட்ச்பீல்ட் – ஆஸ்திரேலியா

2.சமாரி அதபத்து (கேப்டன்)-இலங்கை

3.எல்லிஸ் பெர்ரி-ஆஸ்திரேலியா

4.அமெலியா கெர்-நியூசிலாந்து

5.பெத் முனி-ஆஸ்திரேலியா

6.நேட் ஸ்கிவர் பிரண்ட்-இங்கிலாந்து

7.ஆஷ் கார்டனர் – ஆஸ்திரேலியா

8.அனபெல் சுதர்லண்ட்-ஆஸ்திரேலியா

9;நடினி டி கிளெர்க்-தென் ஆப்பிரிக்கா

10;லியா தகுகு – நியூசிலாந்து

11. நடியா அக்தர் – வங்காளதேசம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *