வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. இதில், ஜான் சேப்பல், கேப்டன் ஷாய் ஹோப், அமீர் ஜன்கோ ஆகிய 3 வீரர்களும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர்.
இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்தது. இதில், அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 101 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 223 ரன்களும் எடுத்து அசத்தினர்.  இதன்மூலம், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *