சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு – வணிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 66 ரூபாய் அதிகரித்து, தற்போது 2 ஆயிரத்து 984 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. இதனால் உணவகங்கள், பேக்கரிகள், தேனீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்குச் சமையல் எரிவாயு செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வும் வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *