பட்டினப்பாக்கத்தில் தன்னை மீறி புதியத் தலைமைச்செயலகம் கட்ட முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இலவச பேருந்து பயண சலுகை கொடுப்பதற்கு முன்னால், பெண்கள் எங்கும் செல்லவில்லையா? என்றும், இலவச சிலிண்டர் கொடுப்பதற்கு முன்பு, வீட்டில் அடுப்பு எரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
புதியத் தலைமைச்செயலகம் கட்டுவதை எதிர்த்து பட்டினப்பாக்கம் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை மீறி புதியத் தலைமைச்செயலகம் கட்ட முடியாது என்று கூறினார். எனவே நான் சட்டமன்றத்திற்கு வராத வரை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

