அதனைத்தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் சவரன் ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது.
இதற்கிடையே மத்திய பட்ஜெட் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெட் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகக் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து காணப்பட்டது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு தங்கம் விலை மேலும் ‘கிடுகிடு’வென உயர்ந்தது.
மதியம் 2-வது முறையாகத் தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. சவரனுக்கு மொத்தமாக ரூ.480 உயர்ந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.