
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
ஹாங்சோவ், 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டியின் 4-வது நாளான நேற்று நடந்த குதிரையேற்றம் போட்டியில், ‘டிரஸ்சேஜ்’ அணிகள் பிரிவில் அனுஷ் அகர்வாலா, ஹிரிடாய் விபுல் செடா, திவ்யாகீர்த்தி சிங், சுதிப்தி ஹஜெலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 209.205 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது.

வீரர், வீராங்கனைகள் குதிரையைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அதனை மைதானத்தில் துல்லியமாக அசைந்தும், நளினமாக நடைபோட வைத்தும் அபாரமாகச் செயல்பட்டதால் இந்தியாவுக்கு இந்தத் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 3 தங்கம் வென்ற இந்தியா அதன் பிறகு குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும்.
41 ஆண்டுக்குப் பிறகு இந்தியா மீண்டும் அசத்தி இருக்கிறது. சீனா (204.882 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஹாங்காங் (204.852 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.
துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 50மீ ரைபிள் 3பி தனிநபர் இறுதிப் போட்டி நடந்து வருகிறது. நீல் ஸ்டேஜ்ஜில் சிஃப்ட் கவுர் சாம்ரா 154.6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆஷி 152.5 உடன் 6-வது இடத்தில் உள்ளார்.
25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, மணினி கவுசிக், ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று உள்ளது.
துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா மொத்தம் 594 புள்ளிகளுடன் தகுதி சுற்றை முடித்து உள்ளார். இதனால் புதிய ஒரு தேசிய சாதனை படைத்து உள்ளார். அவர், இரண்டாவது இடம் பிடித்து உள்ளார். இந்தப் பிரிவில், சீனாவின் ஜியா சியு முதல் இடத்தில் உள்ளார். இந்தியா வெள்ளி பதக்கம் வெல்வதற்கான சிறந்த இடத்தில் உள்ளது.

தேக்வாண்டோ: இந்தியாவின் ஷிவான்ஷ் தியாகி ஆடவர் 80 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில், கம்போடியா வீரர் மிதோனாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திக் காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், குத்து சண்டை, வாள்வீச்சு, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.


