இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடர்ந்தால் வெற்றி யாருக்கு..?

Advertisements

பெகல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா, -பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. 26 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இதற்கென தனி பயிற்சி அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் சிக்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கையில் முதல் கட்டமாக, எல்லைகள் மூடல், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து, அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற உத்தரவு, தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு என்று அதிரடி காட்டியுள்ளது இந்திய அரசு.
காஷ்மீரில் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி முகாம், அதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர் ஆலோசனை என்று அடுத்தடுத்த நகர்வுகள், பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற பரபரப்பை உருவாகி உள்ளன.

இது சில குறிப்பிட்ட  தீவிரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக்கா. அல்லது முழு அளவிலான போரா. என்று விவாதங்கள் தொடங்கி உள்ளன. இரு நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைகள் உச்ச கட்ட உஷார் நிலையில் இருக்கின்றன. போர் மூண்டால் யாருக்கு படை பலம் அதிகம், ஆயுத பலம் அதிகம், அதிக வலிமை கொண்ட நாடு எது என்பது தொடர்பான ஒப்பீடு இதோ. ராணுவ பலத்தை பொறுத்தவரை உலகின் 145 நாடுகளின் தர வரிசை பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா உலகின் 4வது சக்திவாய்ந்த ராணுவம் என்ற இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளன. இதில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி 12வது இடத்தில் உள்ளது.

வீரர்கள் பலத்தை பொறுத்தவரை இந்திய ராணுவத்தில் 14 லட்சத்து 55 ஆயிரத்து ,440 வீரர்கள் உள்ளனர். இது தவிர 25.27 லட்சம் துணை ராணுவத்தினர், 11.55 லட்சம் ரிசர்வ் படையினர் இருக்கின்றனர். ஆனால், பாகிஸ்தானிடம் 6 லட்சத்து 54 ஆயிரத்து வீரர்கள் மட்டுமே உள்ளனர். துணை ராணுவத்தினர் 5 லட்சம்பேரும், ரிசர்வ் படையினர் 5.5 லட்சம் வீரர்கள் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நேரடி போர் என்றால் பாகிஸ்தான் வீரர்கள் சில நாட்களில் இந்தியாவிடம் தோற்பது உறுதி.இந்தியாவிடம் 4,201 பீரங்கிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் பாகிஸ்தான் 2,627 பீரங்கிகளை வைத்துள்ளது. காவச வாகனங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மலைக்குள் மடுவுக்கு இடையேயான வித்தியாசம். ஒரு லட்சத்து ,48 ஆயிரத்து 594 கவச வாகனங்களை இந்தியா வைத்துள்ளது.

இந்தியாவிடம் 5,200 கி.லோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அக்னி 5 ரக ஏவுகணைகள் தவிர குறுகிய தூரம் சென்று தாக்கும் பிருத்வி, பிரம்மோஸ் ரக ஏவுகணை இருக்கின்றன. பாகிஸ்தானில், 2,750 கிலோ மீட்டர் வரை செல்லும் ஷாஹீன் 3 ரக ஏவுகணைகள் மட்டுமே இருக்கின்றன.இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணுஆயுதங்களை வைத்துள்ளன. எதிரிநாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் இந்த அணுகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வசம் 180 அணு குண்டுகளும், பாகிஸ்தானிடம் 170 அணு குண்டுகளும் உள்ளன.
போர் விமானங்கள் எண்ணிக்கையிலும் இந்தியாவுக்கு தான் முதலிடம். இந்தியாவிடம் 2,229 போர் விமானங்களும், 513 பைட்டர் ரக விமானங்களும் உள்ளன. இந்தியா வசம் ரபேல், சுகாய்- 30 எம் கே. ஐ. ரக நவீன விமானங்கள் இருக்கின்றன.

பாகிஸ்தான் நம்மோடு ராணுவ ரீதியாக மோதி நான்கு முறை தோற்றுள்ளது. நாம் சண்டைக்கு சென்றாலும் பாகிஸ்தான் வேண்டாம் என்று நம் காலில் விழுவுத் தான் புத்திசாலிதனம். அதனிடம் ஆயுதங்கனே அதிகமாக இல்லை.அதோடு நாடே வறுமையில் தாண்டவம் ஆடுகிறது. இதையெல்லாம் நினைத்தும் தன் மக்களை காப்பாற்ற இதை செய்தால் நல்லது. இல்லையென்றால் பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *