சொன்னதை செய்து கட்டிய இந்தியா!

Advertisements

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்தச் செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

550 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்குப் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த 2 செயற்கை கோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.

ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இது கடந்த செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்குத் தொடங்கியது. இதனை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை 4.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *