வடமாநிலங்களில் மழை – குளம் போல் தேங்கிய வெள்ளம்..!

Advertisements

தில்லியில் கனமழை பெய்ததால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகனங்கள் நீந்தியபடி சென்றன. தில்லியிலும் அதையொட்டிய அரியானா, உத்தரப்பிரதேச மாநிலப் பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் தில்லியில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

கன்னாட் பிளேஸ் சர்க்கிளில் பல கட்டடங்களின் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கன்னாட் பிளேசில் சாலையில் குளம்போல் தேங்கிய நீரில் நீந்தியபடி வாகனங்கள் மெதுவாகச் சென்றன. சகீரா சுரங்கப் பாதையில் ஆளை மூழ்கடிக்கும் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

கனமழை பெய்ததால் தில்லியில் தேவ்லி என்னுமிடத்தில் தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது இத்தாலியின் வெனிஸ் நகரின் கால்வாய் போல் தோற்றமளித்தது. தில்லியில் பெரிய மாநாட்டு அரங்கமான பாரத மண்டபம் அமைந்துள்ள பிரகதி மைதான் பகுதியிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேகமூட்டமாகக் காணப்பட்டதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வாகனங்கள் பகலிலும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுச்சென்றன.

நிசாமுதீன் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையின் கீழ் உள்ள சுரங்கப்பாதையான மிண்டோ பாலத்தின் கீழ் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துசென்றன. கனமழை பெய்ததால் சாலையின் சிக்னல்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேகமூட்டம், கனமழை ஆகியவற்றால் பார்வைப் புலப்பாடு குறைவாக இருந்ததால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பஞ்சிகுயான் அணுகுசாலையில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது.

கனமழை காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா நிறுவனங்களில் தில்லிக்கு இயக்கும், தில்லியில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலிலும் இன்று கனமழை பெய்ததால் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி மெதுவாகச் சென்றன.
பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *