“காலதாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்” – துரை வைகோ!

சென்னையில் பெரிய விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், காலதாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே முக்கியக் காரணம் என துரை வைகோ குற்றம்சாட்டு.

திருச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாலப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த துரை வைகோ, சென்னையில் பெரிய விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், புதிய விமான நிலையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே முக்கியக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *