முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 246 ரன்கள்..!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்  முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகப்பட்சமாக கேப்டன் டாம் லேதம் 59 ரன்கள் எடுத்தார்.
மேலும் டாம் பிலெண்டல் 53 ரன்களுடனும், கிளேன் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் பந்து வீச்சில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *