தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவில் திமுக தனது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்றச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திற்குத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஊகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டைத் திமுக தலைமை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



