
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க வெள்ளி விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு சங்கக் கொடி மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் வெள்ளிவிழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்கத்தலைவர் ஜெய்சந்த் தலைமையில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து வணிகர் சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்ட சங்கக்கொடியை ஏற்றிக் கல்வெட்டைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வீரவாளுடன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் புதிய தலைவர் ஜெசந்த், செயலாளர் ஷேக்அப்துல் காதர், பொருளாளர் பாண்டுரங்கன் மற்றும் பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது,
அனைத்து வியாபாரிகள் சங்க தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து சால்வை அணிவித்து கௌரவித்தார், இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் கே ஏ எஸ். சுதாகர், தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் கேளம்பாக்கம் ஊராட்சி கவுன்சிலர் திவ்யா வினோத் கண்ணன் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




