
பொள்ளாச்சி நகர பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவை தீர்ப்பதற்கு ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதற்காக ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மின்மேட்டர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பணியில் முடிவுற்றது சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர மன்ற தலைவர் கடந்த 10 ஆண்டுகளில் பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் குடிநீர் தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர். இதனால் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூழல் நிலவியது.
திமுக அரசு பொறுப்பேற்றுடன் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார்கள் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்க கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.



