
29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டுப் பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களைக் கையில் எடுத்துப் பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களைப் பிடிக்கும் எனத் தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்துக் கணிப்பு பொய்யாகும் என உறுதியாகக் கூறினார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்லச் செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை 18 இடங்களைப் பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.


