புர்கா அணியாததால், மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.!

Advertisements

உத்தரபிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால், மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கந்தாலா அருகேயுள்ள கார்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாரூக். இவருக்கு தாகிரா என்ற மனைவியும் ஆஃப்ரின், ஷெக்ரீக் என இரு மகள்கள் உண்டு. மேலும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், தாகிரா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவர் புர்ஹா அணிந்திருக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக, கணவர், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்று விட்டார் பாரூக். இதை, அவரின் மகள்கள் இருவரும் பார்த்து விட்டனர். எங்கே காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்று பயந்த பாரூக் , இரு மகள்களையும் கொலை செய்தார். டிசம்பர் 10ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து, பாரூக்கின் தந்தை தாவூத் மருமகள் மற்றும் இரு பேரக்குழந்தைகளை காணோம் என போலீசாருக்கு தகவல் அளித்தார். விசாரணையில், பாரூக் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்று 7 அடி ஆழ குழி தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார், சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாரூக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *