
தனியார் துறை நிறுவனங்களில் 2020- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி தனியார் துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஹரியானா மாநில அரசின் உத்தரவுப்படி 75 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஹரியானா நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
உள்ளூர் வாசிகள் வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் மனோகர்லால கட்டார் தலைமையிலான பாஜக அரசு தனியார் துறைகளில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பினை, அதாவது 30000 ஆயிரத்திற்கும் அதற்கும் குறைவான ஊதியம் பெறும் வேலையை வழங்க கட்டாய சட்டம் இயற்றப்பட்டது.
மாநில குடியுரிமை 15 வருடங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இக் கட்டாய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹரியானா மாநில நீதிமன்றம் அதிரடியாக அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.

