Durai Murugan: தண்ணீர் இருந்தும் திறக்க மறுக்கும் கர்நாடகா!

Advertisements

இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்துகொள்வது அவசியம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  கர்நாடக திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூற முடியாது. கர்நாடகாவிலிருந்து 12.500 கனஅடி நீர் திறக்க இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

ஆற்றின் கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற விதியைக் கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைக் கூடக் கர்நாடகா மதிப்பதில்லை.

கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருந்தும் அதைத் திறக்க மறுக்கிறார்கள். ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். Durai Murugan

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *