Hebah Patel: மாடர்ன் உடையில்.. கவர்ச்சி புயலான ஜெய் பட நடிகை!

Advertisements

Actress Hebah Patel : மும்பையில் பிறந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கடந்த பத்து ஆண்டுகளாக நல்ல பல படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஹெபா படேல்.

மும்பையில் கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த ஹெபா படேல் அவர்களின் வயது 35. கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெய் அவர்களின் “திருமணம் என்னும் நிக்கா” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ச்சியாகக் கடந்த 10 ஆண்டுகளாகத் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஹெபா படேல், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளைத் தவிர வேறு மொழியில் இதுவரை திரைப்படங்களில் நடிக்கவில்லை.

இப்போது தமிழில் உருவாகி வரும் “வல்லன்” மற்றும் “ஆத்யா” உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 3 திரைப்பட விருதுகளை வென்று அசத்தியுள்ளார் ஹெபா படேல்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *